உன்னாவ்; உ.பி.யில் சாமி சிலைகளை பூமிக்குள் புதைத்து வைத்து மோசடியில் ஈடுபட்ட 3பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடிவரும் வேளையில், உ.பி.மாநிலம் உன்னாவ்நகரில், 3 பேர் கொண்ட கும்பல் சாமி சிலைகளை வைத்து பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பல் ஆன்லைன் மூலம் சாமி  சிலைகளை வாங்கி, அதை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் எடுத்துச் சென்று குழிதோண்டி புதைத்து வைத்துள்ளது. பின்னர், ஏதேதோ காரணங்கள் கூறி, அந்த சிலைகளை தோண்டி எடுத்துள்ளது. பின்னர், அந்த சிலையை காட்டி, அதுமகிமையானது என்று கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆன்லைன் டெலிபாய் ஒருவர் நேரில் சென்று பார்த்தபோது, அந்த சிலைகள் ஆன்லைனில் வாங்கியது, தான் டெலிவரி செய்தது என்பதை அறிந்தார். இதுகுறித்து பொதுமக்களிடமும், காவல்துறையினரிடமும் தெரிவித்தார். இதையடுத்து, அந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.