மதுரை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கட்டராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த ரவுடி கட்டராஜா மீது பட்டீஸ்வரம், கும்பகோணம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 16 கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இறுதியாக கடந்த 2013-ம் ஆண்டு செந்தில்நாதன் என்பவரை கொலை செய்த வழக்கில் கட்டை ராஜா கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனையும், கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வதித்து கும்பகோணம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து ரவுடி கட்டராஜா ஆறுமுகம், செல்வம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்த னர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பில், கட்டைராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும், அத்தண்டனையை சீராய்வு இன்றி அனுபவிக்கவும் உத்தர விட்டனர். மேலும், அவரது கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் ஆணையிட்டனர்.