டெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்தித்து பேசினார்.

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பழங்கு இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டார். ப அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, திரவுபதி முர்மு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel