டெல்லி: முதுநிலை நீட் கவுன்சிலிங்கில் தலையிட்டு,மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்த முடியாது என்பதால், அதில் தலையிட மாட்டோம் என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதனால் நீட் கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிகிறது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை என தெரிவித்துள்ளது. மேலும் ‘மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் கொண்டு செல்ல விரும்பவில்லை. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். திட்டமிட்டபடி கலந்தாய்வு நடக்கட்டும், அதனை நிறுத்த வேண்டாம்’ நீதிபதி சந்திரசூட் அமர்வு கூறியுள்ளது.