கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 20

பா. தேவிமயில் குமார்

என் கனவில் வரும் முகம்….

செங்கோல் எடுத்து
சிற்றடி வைத்தேன்,
சிரசில் கிரீடம் வைத்தார்கள்!!!

பொன்னாலான அரியணையில்
மிடுக்குடன்
கால் மீது கால் போட்டு
அமர்ந்தேன்!!!

வைரம் பதித்த காலணி,
அணிவித்தார்கள்!
பட்டு மிதியடியில்
பாதம் வைத்தேன்!!

வானத்து விண்மீன்கள்
வாசலில் கோல மிட்டன!!!

சூரியன் சந்திரன்
சுற்றும் கோள்கள்
எட்டும் வணங்கின
என் வாசலில் நின்று!!

புனித நதிகளின் நீரால்,
நீராட்ட பட்டேன்!
மேள தாளத்துடன்!!!

உலகின் அடிமை
அரசுகளின் மன்னர்கள்
மண்டியிட்டு வணங்கிசென்றார்கள்!

கப்பம் வந்தது
கப்பல் கப்பலாக
துறைமுகம் போதவில்லை!!!

வெள்ளி தங்க,
காசுகளை வாரி இரைத்தேன்
இல்லாதவர்க்கு!!!

எந்த நாட்டுக்கு
இந்த ஆண்டு விடுதலை
கொடுக்கலாம் என
அறிவித்தேன்!!!

அமைச்சர்கள் அனைவரும்
பெண்கள் என
அவசர சட்டம் போட்டேன்!!

பெண்களுக்கு
புதிய சுதந்திர
அறிவிப்புகளை வெளியிட்டேன்!

வீட்டு வேலைகளை
இனியாவது
ஆண்கள் செய்ய வேண்டுமென
கையெழுத்திட்டேன்!

குழந்தைகளுக்கு
கனவு திட்டங்கள் பல
கையழுதிட்டேன்!!!

நாட்டின் அனைத்து
மதங்களின் குருமார்களும்
வாழ்த்தி விட்டு சென்றார்கள்!

அத்தனை வெள்ளையர்களும்
என்முன் கை கட்டி
என் ஆணைக்காக
காத்திருந்தார்கள்!!!

என் நாட்டின் கோஹினூர் வைரம்
என் கிரீடத்தில்
எப்படி ஜொலிக்கிறது!!
தொட்டு பார்த்தேன்
பரவசமடைந்தேன்!!!!

கண்ணுக்கெட்டிய
தூரம் வரை
மக்கள் கூட்டத்தில்
மாபெரும் உரையாடினேன்!!!

இப்படியே…..
கனவுகளில்…..
பக்கிங்காம் அரண் மனையில்,
இங்கிலாந்தின்
ராணியாக
கனவிலாவது,
வெள்ளையர்களை
வீரத்துடன் ஆளும்
இந்திய!!!!!!
அரசியாக இருக்கிறேன்…
என்பதே மகிழ்ச்சி…