டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும், நாடு முழுவதும் மொத்தம் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன என பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை என்பது பெருமைக்குரியது.

கடந்த 2021ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில் 24 போலி பல்கலைக்கழகங்கள் இருந்த நிலையில், தற்போது 21 இருப்பதாக தெரிவித்து உள்ளது. யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லி மற்றும் 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக கூறியிருப்பதான், அதற்கான  பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் அதிக பட்சமாக டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும் உ.பி.யில் 4, மேற்குவங்க மாநிலத்தில் 2, ஒடிசாவில் 2,  கர்நாடக மாநிலத்தில் 1, ஆந்திராவில் 1, மகாராஷ்டிராவில் 1, கேரளாவில் 1, புதுச்சேரியில் 1, ஆக மொத்தம்   21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை UGC வெளியிட்டுள்ளது.

எந்த கல்வி நிறுவனம் போலியானது என்பது குறித்த முழு பட்டியலை கீழே காணலாம்…..