புதுடெல்லி:
ரும் 28-ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வரும் 28-ஆம் தேதி மாலை மூன்றரை மணிக்கு, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா தலைமையில் இந்த் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இடைக்கால தலைவரான சோனியா தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.