சென்னை; பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது என அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் அரசுக்கு ரூ 165 கோடி இழப்பு ஏற்படுத்த நடந்த பத்திரப்பதிவு துறை மோசடி ஊழல் குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
சென்னையில் அமையவுள்ள 2வது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்த நிலையில், அறப்போர் இயக்கம் திமுக அரசு மீது பகிர் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.
பரந்தூர் பகுதியில்  விமான நிலையம் வரப்போகும் இடம் என்பதால் அங்கு நிலம் வைத்திருப்பவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு கிடைக்கும் என்று கணக்கிட்டு தங்களுடைய 73 ஏக்கர் நிலத்தின் மதிப்பை உயர்த்த கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசனுடன் இணைந்து மோசடி பத்திரப்பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 165 கோடி அதிகமாக இழப்பீடு பெற திட்டமிட்டு காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா? உயர் பதவியில் இருந்து கொண்டு திருடர்களுடன் கூட்டணி வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் சீனிவாசன் போன்ற அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா? மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுமா? அல்லது திருட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து மக்களுக்கு துரோகம் செய்யுமா?
மோசடி பத்திரப்பதிவு மூலம்  தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது என அறப்போர் இயக்கம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஆதாரங்களுடன் அரசுக்கு புகார் அளித்துள்ளது.  இந்த மோசடி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்படுமா? மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் மற்றும் இதர அதிகாரிகள் suspend செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்களா? மோசடி தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை பாயுமா? மக்கள் பணம் கொள்ளை போகாமல் தடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பி உள்ளது.
https://patrikai.com/parandur-new-airport-issue-minister-thangam-thennarasu-detailed-report/