பீஜிங்: உலக ஜனத்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் மக்கள் தொகை குறையத்தொடங்கியுள்ள நிலையில், ஜனத்தொகையை பெருக்க அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலக ஜனத்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, கடந்த 2021ம் ஆண்டு 3 குழந்தைகள் வரை மட்டுமே பெற வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்தது. சீனாவின் தேசிய சட்டமன்றம், தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC), நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு பெரிய கொள்கை மாற்றத்தில், 2021 ஆகஸ்ட் மாதம் மூன்று குழந்தைகள் கொள்கைக்கு முறையாக ஒப்புதல் அளித்தது. இது திருத்தப்பட்ட மக்கள்தொகை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்றியது, இது சீன தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறது, இது சீன தம்பதிகள் பெருகிவரும் செலவுகள் காரணமாக அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதைத் தவிர்க்கும் முயற்சியாக இருந்தது.
ஆனால், இதிர் எதிர்பார்த்த அளவுக்கு பிறப்பு விகிதம் இல்லாததால், அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. மானியம், வரி தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, கல்வி, வீட்டுக் கடன், வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று சீனா நம்பிக்கை கொண்டுள்ளது