தருமபுரி:
ருமபுரி பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள பாரதமாதா நினைவாலய கதவை உடைத்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்துக்கு 29ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் பாரதமாதா நினைவாலயம் அமைந்துள்ளது. கடந்த 11ம் தேதி பாஜகவினர் பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாரதமாதா நினைவாலயத்தில் உள்ள பாரதமாதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க நடைபெற்ற சுதந்திர தின அமுத பெருவிழாவில் பேரணியாக சென்றனர்.

ஆனால் அங்கு அமைந்துள்ள நினைவா நிலையத்தில் முன்புறம் உள்ள கதவு பூட்டி இருந்தது. இந்த நிலையில் பாஜகவினர் அந்த கூட்டை திறக்க சொல்லி அங்கு பணியாற்றும் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் பாஜகவினர் எவ்வளவோ கூறியும் பணியாளர்கள் அந்த கூட்டை திறக்க மறுத்து விட்டனர். அதனால் பாரதமாதா நினைவாலயத்தில் முன்புறம் உள்ள கதவின் பூட்டை பாஜகவினர் உடைத்து விட்டு உள்ளே நுழைந்தனர்.

இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்துக்கு 29ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது