சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அமலில் உள்ளது. இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் பரிசார்த்த முறையில் சென்னையின் சில இடங்களில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி, 1545 அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ. 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டது. தொடர்ந்து, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அதிகாரியை தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது.
15 மாவட்டங்களில் 1 -5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணி தொடக்கம்!