சென்னை:
ரும் 18 முதல்மணல் லாரிகள் ஓடாது என்று மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவிக்கையில், தமிழகத்தில் எம் சாண்ட் மற்றும் ஆற்று மணலை, அங்கீகரிக்கப்படாத பல குவாரிகளில் இருந்து விற்கின்றனர். இதனால், அரசுக்கு இழப்பு ஏற்படுவதுடன் அனைத்து லாரி உரிமையாளர்களுக்கும் லோடு கிடைப்பதில்லை. இந்த முறைகேடுகளை தடுக்கும்படி, போக்குவரத்து கமிஷனரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இதைக் கண்டித்து, வரும் 18ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதேநாளில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்,

[youtube-feed feed=1]