கண்ணூர்: போதைபொருளுக்கு அடிமையான 9ம் வகுப்பு மாணவன் ஒருவன், சக மாணவிகளுக்கும் போதை பொருள் வழங்கி அவர்களை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இதில் ஒருமாணவி தற்கொலை முயற்சியை நாடிய நிலையில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விசாரணையில் சுமார் 20 மாணவிகளை அந்த மாணவன் வன்புணர்வு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுதான் கேரள மாடல் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. 9ம் வகுப்பு மாணவியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பலாத்காரம் செய்ததாக மோ அஃப்லா மற்றும் ரபீக் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் புதிதாக சேர்ந்தார். அந்த மாணவியுடன் நட்பாக பழகிய மாணவன், அந்த மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து, மயங்கி பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.  ஆரம்பத்தில், அந்த மாணவிக்கு சிறிது சிறிதாக போதைப்பொருள் கொடுத்து பழக்கப்படுத்தி,  அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்யத் தொடங்கினான். அதை தனது செல்போனில் பதிவு செய்தும் வைத்துள்ளான். மேலும் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியும் வந்துள்ளான்.

 இந்த நிலையில் அந்த மாணவியின் செல்போனில் இருந்த பலாத்கார காட்சிகளை மாணவியின் பெற்றோர் தற்செயலாக பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து விசாரித்தபோது, அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதைத்தடுத்த பெற்றோர், போதைக்கு அடிமையான தங்களது மகளை வயநாட்டிலுள்ள போதைப்பொருள் மீட்பு மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து  கண்ணூர் டவுன் போலீசில் மாணவன் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த மாணவனை கைது செய்த போலீசார் அவரிடம் சற்று கடுமையாக விசாரித்தனர். அப்போதுதான், அந்த மாணவனும் போதைக்கு அடிமையான வன் என்று தெரிய வந்ததுடன், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தான் விரும்பும் மாணவிக்கு போதைபொருள் கொடுத்து, அவர்களிடம் பாலியல் வன்புணர்வு செய்து வருவதாகவும், இதுவரை  20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போதைப்பொருளை கொடுத்து அவர்களை அதற்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து அந்த மாணவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்தனர். இதற்கிடையே அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கம் செய்தது.  அந்த மாணவன் சிறுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது . அந்த மாணவனுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும் போதைப்பொருள் மாஃபியாக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பதாக சிறுவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.