பீகார்:
ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவுடன், பீகாரில் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை பதவியேற்கிறார்.
பீகாரில் அரசியல் திருப்பமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக கூட்டணியில் இருந்தும் விலகினார். தேஜஸ்வி யாதவ் உடன் ராப்ரி தேவியை அவரது இல்லத்தில் சந்தித்த நிதிஷ்குமார், புதிய கூட்டணி அரசு அமைக்க ஆதரவு கோரினார்.
பின்னர் பாட்னாவில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய கூட்டணியான, மகாபந்தன் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர்.