சென்னை:
வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் வருவதை தடுக்கும் வகையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (மெட்ரோவாட்டர்) மூன்று புதிய கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் கட்டும் பணியை துவக்கியது. இத்திட்டத்திற்கு மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், வேளச்சேரி ஏரி அருகே ரூ.4.08 கோடியில் நீரேற்று நிலையங்கள் கட்டப்படும். இந்த நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கக்கன் நகர், பவானி நகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 17,000 பேர் பயனடைவார்கள் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், கிண்டியில் ஒரு நாளைக்கு 1.10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட (எம்எல்டி) மற்றொரு கழிவுநீர் நீரேற்று நிலையத்தை அமைக்க அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையம் ரூ. 3.27 கோடி மதிப்பிலான இந்த வசதி கிண்டி, மடுவங்கரை மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் பயனடைவார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 15 மண்டலங்களிலும் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்து தூர்வார வேண்டும் என்று நேரு கூறினார். மேலும், அடையாறு ஆற்றில் கழிவுநீர் வருவதை தடுக்கும் பணி ரூ.125.05 கோடி செலவில் நடந்து வருகிறது. இதுதவிர, அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீரை அடைக்க ரூ.401.87 கோடியில் 36 திட்டப்பணிகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.
மேலும், பேசிய அவர், 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ. 877.37 கோடி. ஆலைகளின் மொத்த சுத்திகரிப்பு திறன் ஒரு நாளைக்கு 902 மில்லியன் லிட்டர். ரூ. 6,078.40 கோடியில் 400 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட உப்புநீக்கும் ஆலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநகரில் உள்ள 29 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.