பர்மிங்ஹாம்:
காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (steeplechase) போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

இங்கிலாந்தில் பர்மிங்ஹாம்மில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே இலக்கை 8.11.20 நிமிடங்களில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் பதக்கம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவினாஷ் பெற்றார்.
Patrikai.com official YouTube Channel