டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை நடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு நிதிஆயோக் 6வது கவுன்சில் கூட்டம் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற வில்லை. இந்த நிலையில், 2 ஆண்டுகளாக பிறகு நாளை 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் துணைநிலை கவர்னர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நாளை நடைபெறும் நிதிஆயோக் கவுன்சில் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம், வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.