சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விசாரணையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இந்த வழக்கை  சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஜி.ஜெயராமன் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி புதிய நீதிபதி அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க  ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி பொதுக்குழு நடைபெறுவதை தடைவிதிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அப்போது பேசிய நீதிபதிகள் நீங்கள் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே நாட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணசாமி முன் பட்டியலிடப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டது. அதாவது விசாரணையை நீதிபதி கிருஷ்ணன் ராமசாரி விசாரிக்க கூடாது என தெரிவித்தார். இந்த சூழலில் நீதிபதி கிருஷ்ண ராமசாமி ஓபிஎஸ் தரப்பினரிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். எதற்காக நீங்கள் நீதிபதியை மாற்ற சொன்னீர்கள்? எனவும் இத்தகைய செயல்பாடானது நீதிதுறையை கலங்கப்படுத்தும் செயல் என கூறியுள்ளார். தொடர்ந்து 4ந்தேதி இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஸ்-ஐ கடுமையாக விமர்சித்த நீதிபதி தான்தான் வழக்கை விசாரிப்பேன் என அறிவித்தார்.

இதையடுத்து, ஒபிஎஸ் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டு, மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து,  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை நீதிபதி ஜெயராமன் விசாரிப்பார் என தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி அறிவித்து உள்ளார்.