பரிமலை

ன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது.

File pic

ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் ஐந்து நாட்களுக்கு நடை திறப்பது வழக்கமாகும்.   கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இன்று மாலை முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.   தவிரக் கேரளா முழுவதும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அதிக அளவில் ஏற்படுகிறது.

எனவே கேரள மாநிலம் பட்டனம் திட்டா மாவட்ட ஆட்சியர் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் கடும் நிலச்சரிவு காரணமாகச் சபரிமலை வரும் பக்தர்கள் பம்பை ஆற்று வழி மற்றும் நீலி மலைப் பாதையைப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவு இட்டுள்ளார்.