புதுடெல்லி:
ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து ஆகஸ்ட் 5ம் தேதி நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து ‘சலோ ராஷ்டிரபதி பவன்’ பேரணி நடத்துவார்கள், அதே நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மூத்த கட்சித் தலைவர்கள் ‘பிரதமர் வீட்டு முற்றுகை” பேரணியில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel