மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நேற்று முன் தினம் 44 ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கின.  இந்த செஸ் ஒலிம்பியாட் பிரதமர் மோடியால் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.   நேற்றிலிருந்து முதல் சுற்றுப் போட்டிகள் தொடங்கி உள்ளன.

இந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தாம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது..   இதன் விவரங்கள் வருமாறு

இந்திய ஆடவர் அணியின் ‘ஏ ‘ பிரிவு அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது .இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

ஆடவர் இந்தியா ‘பி’ அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்து விளையாடியது.  இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

ஆடவர் இந்தியா ‘சி’ அணி தெற்கு சூடானை எதிர்கொண்டது .இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

முதல் சுற்றில் இந்திய மகளிர் ஏ அணி தஜிகிஸ்தானை எதிர்கொண்டது.  .இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

மகளிஎ இந்தியா ‘பி’ அணி, வேல்ஸை எதிர்கொண்டது .இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது

மகளிர் இந்தியா ‘சி’ அணி ,ஹாங்காங்கை எதிர்கொண்டது இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

Chess olympiad, First round, India, won, செஸ் ஒலிம்பியாட், முதல் சுற்று, இந்தியா, வெற்றி,