சென்னை:
பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் நடைபெற்ற செஸ்ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, விழாவை தொடர்ந்து கவர்னர் மாளிகையில் தங்கியுள்ளார். அங்கு அவரை தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த் ஆலோசனை கூட்டத்தில் 2024 பாராளுமன்ற பொது தேர்தலின் போது மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel