திருநெல்வேலி
தமிழக போக்குவரத்துத்துறை துணை ஆணையர் நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,
தமிழக போக்குவரத்துத்துறையின் துணை ஆணையராகச் சென்னையில் நடராஜன் பணி புரிந்து வந்தார். இவர் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரு.35 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையொட்டி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடராஜன் மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் திருநெல்வேலிக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பனீந்தர் ரெட்டி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த பிறகு அவர் தொடர்ந்து பதவியில் இருக்க முடியாது என்பது நடைமுறை ஆகும். எனவே இதை காரணம் காட்டி நடராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் முன் அனுமதி இன்று திருநெல்வேலியில் இருந்து எங்கும் செல்லக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.