சென்னை

ன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ரூ.4800 கோடி ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் ரூ.4800 கோடி ஊழல் செய்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.   இந்த வழக்கை சிபிஐ நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டிருந்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.   இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.   அதன் பிறகு நீண்ட காலமாக இந்த வழக்கில் எவ்வ்வித முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் இருந்தது.

இதையொட்டி தமிழக அரசு இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையீடு செய்தது.   நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இந்த வழக்கு விசாரணை விரைவில் எடுத்துக் கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.  அதன் அடிப்படையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.