சென்னை:
சொத்து வரி செலுத்தாவிட்டால் இனி வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீரமைக்கப்பட்ட சொத்து வரி பற்றி வீட்டில் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்களே வீட்டை அளந்து வரிவிதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இதில் அலட்சியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சென்னையில் உள்ளனர்.

அவர்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்து அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களுக்கு 3 முறை நோடடீஸ் வழங்கி, 6 மாதம் அவகாசம் கொடுக்கப்படும்.வீட்டு உரிமையாளர்களே வீட்டை அளந்து வரி விதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இதில் அலட்சியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.