புதுடெல்லி:
குடியரசு தலைவர் ராம்நாத் இன்று நாட்டு மக்களுகாக உரையாற்ற உள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் பதவி விலகுவதை முன்னிட்டு இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவியர் ராம்நாத் கோவிந்த்துக்கு நேற்று பிரதமர் மோடி, எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரியாவிடை அளித்தனர். நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா பங்கேற்றனர்.