2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இயக்குனர் சச்சி (என்கிற சச்சிதானந்தம்) இயக்கிய அய்யப்பனுக்கு கோஷியும் என்ற மலையாள படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது.
இதே படத்தில் ‘களக்காத்தா சந்தனமேரா’ என்ற கிராமிய பாடலை பாடிய நஞ்சியம்மா-வுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த கலைஞரான நஞ்சியம்மா-வுக்கு விருது கிடைத்தது குறித்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.
விவசாயப்பணி, ஆடு, மாடுகள் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளுடன் பாடல்களை தன் உயிராக நேசித்து பாடிவருபவர் நஞ்சியம்மாள்.
தனக்கு இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த இயக்குனர் சச்சி 2020 ஜூன் மாதம் அகால மரணமடைந்தது இந்த நேரத்தில் தனக்கு வேதனையாக உள்ளதாக கூறியுள்ள நஞ்சியம்மா.
சினிமாவில் என்னை பாட வைத்த இயக்குனர் சச்சி-க்கே இந்த பெருமை சென்றடையும் என்று கூறியுள்ளார்.