ஈகுனே:
உலக தடகளம் ஈட்டி எறிதல் பிரிவல் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 88.39 தூரம் எறிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதி போட்டியில், நீரஜ் பதக்கம் வெற்றி பெற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றால், 19 ஆண்டுக்குப் பின் உலக தடகளத்தில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel