மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துவிதமான பிரிவுகளும், அனைத்த துறைகளும்  கலைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தங்களது பதவிகள் பறிபோனதால்  சோகத்தில் மூழ்கி உள்ளது.

இந்த நிலையில், கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், கட்சி தலைவரான சரத்பவார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக,  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துவிதமான பிரிவுகளும், துறைகளும் உடனடியாகக் கலைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரபுல் படேல்  டிவிட் பதிட்டுள்ளார். அதில், “ கட்சியின் தேசியத் தலைவர் சரத் பவாரின் ஒப்புதலுடன், கட்சியின் அனைத்துப் பிரிவுகள், துறைகள் உனடியாக கலைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்

எந்த காரணத்துக்காக கட்சியின் அனைத்துப் பிரிவுகளும், துறைகளும் கலைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க தேசியவாத காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மறுத்துவிட்டனர்.