சென்னை: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய  இரு அவைகளும் பிற்பகல் 2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வு தொடர்பான பிளக்ஸ் பேனர்களை கொண்டு வந்தனர். தொடர்ந்து,  விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்துக்கு எதிராக முழக்கங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.

இதையடுத்து, நாடாளுமன்ற அவை விதிகளின்படி, சபைக்குள் பிளக்ஸ் பேனர்களை கொண்டு வர அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா கண்டித்தார். ஆனால், அதை ஏற்காமல்  எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷம்  தொடர்ந்தது. விலை உயர்வுக்கு எதிராக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என தொடர் கோஷம் எழுப்பனர். இதையை அவையை பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். அதுபோல பாராளுமன்ற மேலவையில் எதிர்க்ட்சியின் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, அக்னிபாத் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களவையும் பிற்பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

ஏற்கனவே நேற்றைய முதல்நாள் அமர்வு எதிர்க்கட்சியினரின் அமளியால் முடங்கிய நிலையில், இன்று 2வது நாளும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியை தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.