தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
மேலும், எந்த வகை பயன்பாட்டாளர்களுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம். இருந்தாலும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 – 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 500 யூனிட் பயனீட்டாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.298 கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.1, வணிக மின் நுகர்வோருக்கு ரூ.50 உயர்த்த பரிசீலனை
விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட் ஒன்றுக்கு 70 பைசா உயர்த்த உத்தேசம்.
ரயில்வே, அரசு கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு 65 காசுகளும் உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றிற்கு 40 காசுகளும் உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்திக்காக பயன்படும் நிலக்கரியில் 10 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரி பயன்படுத்த வேண்டும் என்று மத்திய எரிசக்தி துறை கட்டாயமாக்கியுள்ளதை அடுத்து உற்பத்தி செலவு அதிகரிப்பதால் விநியோக கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது… ஏன் ? அமைச்சர் செந்தில் பாலாஜி ஷாக்கிங் அறிவிப்பு