டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5லட்சத்தை தாண்டியது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும், 20,044 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,37,30,071 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.80% ஆக உயள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் மேலும், 56 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,660 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் தொற்றில் இருந்து 18,301பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,63,651 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.48% ஆக உயர்ந்துள்ளது. குறைந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,40,760 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.32% ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை 1,99,71,61,438 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 22,93,627 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.