கீவ்: உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை  ஏவுகணைக்கொண்டு தாக்கி சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. இந்த தாக்கதலில் ஏராளமான பொதுமக்களும் பலியாகி வரும் நிலையில், தற்போது,  டினிப்ரோ நகரம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷியாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 மாதத்தைக் கடந்துள்ள நிலையில், போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான இரு நாட்டு ராணுவ வீரர்கள் பலியாகி உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான  பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். பல நகரங்களை தாக்கிய கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வரும் ரஷ்ய படைகள், கடந்த சில நாட்களாக மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவின் மையப்பகுதியில்  ஏவுகணைகள் தாக்குதல்  நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர் உக்ரைன் அரசு  தெரிவித்தது.

இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய வான்வழித் தாக்குதல் சைரன்களுக்கு செவிசாய்க்குமாறு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார் .உக்ரைனில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து தற்போது, உக்ரைனின்  டினிப்ரோ நகரம் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. டினிப்ரோ நகரில் உள்ள தொழில்துறை ஆலை மற்றும் அதற்கு அடுத்துள்ள பரபரப்பான தெரு மீது  ஏவுகணைகளை வீசியது. இதில், 3 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்,  15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அம்மாநில ஆளுநர் வாலன்டின் ரெனிசென்கோ  தெரிவித்து உள்ளார். ஏவுகணைகள் அலுவலகக் கட்டிடங்கள் மீது தாக்கி அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களை சேதப்படுத்தியது என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ரஷியா ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் ராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். . இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களில் 30 சதவீதம் மட்டுமே ராணுவ இலக்குகளை கொண்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தே மற்ற 70 சதவீத தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனவே ரஷியாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.