டெல்லி: காமராஜர் 120வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
கல்வி கண் திறந்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகஅரசு, அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அமைச்சர்கள் காமராஜரின் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். கல்வி நிலையங்களிலும் கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்பபடுகிறது.
காமராஜரின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், காமராஜர் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.