சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி.
இந்தப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சந்திரமுகி 2 என்ற பெயரில் உருவாக இருக்கிறது.
இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார்.
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்க இருப்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இன்று நேரில் சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசீர்வாதம் வாங்கினார்.
Hi friends and fans, Today Chandramukhi 2 shooting begins in Mysore with my Thalaivar and guru’s @rajinikanth blessings! I need all your wishes! 🙏🏼🙏🏼 #Chandramukhi2 pic.twitter.com/dSrD3B5Xwh
— Raghava Lawrence (@offl_Lawrence) July 15, 2022
தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
முதல் பாகத்தின் இயக்குனர் பி வாசு இப்படத்தினை இயக்கியுள்ளார்.