சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, இன்று காலை 9.15மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் தொடங்கியது நடைபெற்று வருகிறது. அதில், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி – ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து உள்பட 16 தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு இடையே இன்று காலை திட்டமிட்டபடி அதிமுக செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருக்கு ஆதரவாளர்களான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இன்று காலை திட்டமிட்டபடி, முதலல் செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கியது இதில், அதிமுக சட்டவிதிகளில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழுவில் மொத்த்ம் 16வரைவு தீர்மானங்களை பொன்னையன் வாசித்தார். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவையனைத்தும் நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக, ஜெ.மறைவுக்கு பிறகு, அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின் இன்று அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.