புதுச்சேரி: சம்பள பிரச்னை காரணமாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குனர் முன்பு ஆம்புலன்சு ஓட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும்கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்த  காலக்கட்டங்களின்போது, ஆம்புலன்ஸ் சேவையை  மக்கள் மறந்திருக்க முடியாது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களின், நோயாளிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதில், கடும் சிரமத்திற்கு இடையே சேவை மனப்பான்மையுடன் களத்தில் நின்றனர். ஆனால், அவர்களின் சேவைக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்படுகிறதா என்றால், அது கேள்விக்குறித்ன். இருந்தாலும், அவர்கள்  நெருக்கடியான நேரத்திலும் சம்பளத்தை  ஒரு பொருட்டே  எண்ணாமல், உயிர்காக்கும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மருத்துவ சேவையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு அளப்பறியது .

ஆனால், அப்பேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என்று புதுச்சேரி மாநிலத் தில் குரல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜா என்பவர், அம்மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஸ்ரீராமுலுவின் முன்பு மண்ணெண்ணைனை தனது ஊடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். தீப்பெட்டியை அவரிடம் கொடுத்து, தன்னை கொளுத்திவிடுமாறு வேண்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.