திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது திருப்பதி கோயிலின் வரலாற்றில் மூன்றாவது முறையாக ஒரு நாள் வசூல் ரூ.6 கோடியைத் தாண்டியது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான காணிக்கை வசூல் என்று கூறப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டபிறக, தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். குடும்பத்துடன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேர காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காணிக்கை இவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள்.
தங்களது காணிக்கையாக பணம் மட்டுமின்றி தங்கம், வைர நகைகள், வெள்ளிப் ளையும் வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையான தினசரி உண்டியல் வருமானம் சராசரியாக ரூ.4 கோடியாக இருந்து வருகிறது. இது விசேஷ நாட்களில் அதிகரித்து ரூ.5 கோடி வரை வசூலாகும். ஆனால், கடந்த மே மாதம் மட்டும், உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் கிடைத்தது. இது திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இது மூன்றாவது முறை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்,, தற்போது ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூலாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.