சென்னை: ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தி வரி செலுத்தி வங்கி நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ்பேக், வவுச்சர், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளைப் பெறலாம் என்று சென்ன மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சொத்துவரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதன்படி சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 27-ம் தேதி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய சொத்துவரியினை எளிதாக செலுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம்:

  • வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள் மூலம் செலுத்தலாம்.
  • கிரெடிட் மற்றுட் டெபிட் அட்டை மூலமாக வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தலாம்.
  • www.chennaicorporation.gov.in இணையதளம் மூலம் எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் செலுத்தலாம்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நேரடியாக பணமாகவும் சொத்துவரி செலுத்தலாம்.
  • ‘‘நம்ம சென்னை’ மற்றும் ‘பே.டி.எம்’ முதலிய கைப்பேசி செயலி மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம்.
  • BBPS (Bharat Bill Payment System) மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம்
  • அரசு இ-சேவை மையங்களிலும் சொத்துவரி செலுத்தலாம்.

சொத்துவரியினை இணைதள மூலமாக செலுத்தினால், குறிப்பிட்ட வங்கிகளின் நிபந்தனைகளுக்குட்பட்டு கேஷ்பேக், வவுச்சர், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.