சென்னை: சென்னை அருகே அதானி நடத்தி வரும் துறைமுகத்துக்காக செயல்பட்டு வரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வரும் 4ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை  குஜராத் மாநிலத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் அதானி குழுமம் நிர்வகித்து வந்தது எல் அண்ட் டி நிறுவனம். இந்நிறுவனத்தின்மீது அப்பகுதி மீனவர்கள் உள்பட பல தரப்பினர் புகார்கள் கூறினாலும், அதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வது இல்லை.

இந்த நிலையில், வாடகை தொடர்பாக அதானி துறைமுகத்துக்காக பணியாற்றி வரும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் அறிவித்து உள்ளனர். ஜூலை 4ந்தேதி (நாளை மறுதினம்) முதல் காட்டுப்பள்ளி துறைமுகத்தில்  கண்டெய்னர் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 2014-ம் ஆண்டு முதல் வாடகை உயர்த்தி வழங்காததை கண்டித்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

80% வடக்கை உயர்வு வழங்கக் கோரி துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளது.