ராணிபேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வருகை சென்றிருந்தார்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
மேலும், ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் மைதானத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.