சென்னை: நிதி நெருக்கடியால் நகராட்சி, மாநகராட்சிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவிக்கு வந்து ஓராண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும் பல காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் காலி பணியிடங்கள் நிரப்பவில்லை என்று எப்போதும்போல கடந்த அட்சியை குற்றம் சாட்டியவர், நிதி நிலைமை சீரானதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேவையான இடங்களில் உள்ள காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு தமிழக முதல்வர், கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த ஆண்டும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதனைக் கொண்டு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அவசர பணிகள் மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
மேலும் அவர் கூறுகையில், தற்போது தமிழக அரசு மிகப் பெரிய நிதி சுமையில் உள்ளது, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிகிறது, இருந்தபோதிலும் தமிழக அரசு மிகப்பெரிய நிதி சுமையால் உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி சுமை சீரானதும் அது பற்றி பரிசீலனை செய்து தேவையான இடங்களில் பணியாளர் நிரப்பப்படும், இதற்கிடையில் தேவையான இடங்களில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கருத்துரிமை கோரப்பட்டுள்ளது, தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப அந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.