சென்னை:
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி ரயில் நிலையங்களில் பயணிகள் குறைவு காரணமாக முக்கிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் அனைத்து ரயில்களும் செயல்படத் தொடங்கிவிட்டன. நேரடியாகவும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாட விருப்பப்படுவார்கள். அதனால் பண்டிகை நாட்களில் ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

எனவே மக்கள் முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்து விடுவார்கள். அந்த வகையில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே,இன்று முதல் அதாவது இன்று முதல் ரயில் முன்பதிவு சேவை தொடங்கப்பட உள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ள அனைவரும் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.