சென்னை:  இபிஎஸ் தலைமைக்கு வருவதை தடுப்பதே ஓபிஎஸ்-ன்நோக்கம், அவர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  குற்றம் சாட்டினார். அதிமுகவின் ஒற்றை தலைமைக்கு 2000 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.

அதிமுக பொதுக்குப வரும் 23ந்தேதி கூட உள்ள நிலையில், கட்சிக்குள் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ளது. இதனால், எடப்பாடி, ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. இதனால், பொதுக்குழு அன்று பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும் காவல்துறை யினரையும் நாடி உள்ளனர்.

இந்தநிலையில், இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்தார். அதிமுக அப்போது “பொதுக்குழு திட்டமிட்டப்படி 23-ம் தேதி நடைபெறும் என்றவர்,  இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களே 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடிதம் கொடுத்துள்ளனர் என்று கூறியதுடன், அதிமுகவில்  அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற எழுச்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுகவினரிடையே உள்ளது என்றார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி ஒற்றைத் தலைமைக்கு வரவேண்டும் என தொண்டர்கள் விரும்பும் நிலையில், அதற்கு மாறாக, எடப்பாடி தலைமையை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றங்களுக்கு செல்வதும், கடிதம் எழுதுவதுமாக இருக்கிறார். ஓபிஎஸ்-ன் இந்த அநாகரிமான நடத்தையை எந்தவொரு அதிமுக தொண்டனும், நிச்சயமாக ஏற்கமாட்டான் என காட்டமாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசியவர், அதிமுகவில் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற கருத்து, முழுமையாக நூறு சதவீதம் ஏற்றக்கொள்ளப்பட்டது என்பதை ஆணித்தரமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றவர், அதிமுக மேல்மட்டத்திலிருந்து, கீழ்மட்டம் வரை எல்லோராலும் ஏற்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதன் மூலம் இது உறுதியாகி உள்ளது.

ஆனால், இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு கடிதம் எழுதி உள்ளார்.  இது வழக்கத்துக்கு மாறான முறை இது. கடிதம் எழுதும் முறை தவறு. அந்தக் கடிதத்துக்கு இபிஎஸ் தற்போது பதிலளித்துள்ளார். ஆனால், ஓபிஎஸ் எழுதிய கடிதம் எப்படி பத்திரிகைகளில் கசிந்தது? அது நியாயமா? அதிமுகவில் கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகளா? அவசியம் என்றால், செல்போனில்  பேசியிருக்கலாம், யாரையாவது அனுப்பி பேசியிருக்கலாம்.

ஒரு கருத்து ஒருமித்து  வருகின்ற நேரத்தில், இதுபோல ஒரு கடிதம் எழுதி, அதை வேண்டுமென்றே ஊடகங்களில் கசிய செய்தால், ஓபிஎஸ்ஸுக்கு என்ன உள்நோக்கம் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிமுகவில் ஒற்றை தலைமையை நோக்கி எல்லோரும் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒற்றைத் தலைமை நல்ல விஷயம், அதை வெளியில் சொல்லியதில் தவறில்லை என்றும் கூறினார். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை (புகழேந்தி) கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சந்தித்துள்ளார். அவர் எப்படி சந்திக்கலாம் என கேள்வி எழுப்பியவர்,  கட்சி விதிப்பதி நீதிமன்றம் சென்றால், அவர்களது அடிப்படை உறப்பினர் பொறுப்பே போய் விடும் என்று தெரிவித்தார்.

அதிமுகவைப் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் கட்சியின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்ற அந்த எழுச்சி ஏற்பட்டளளது.  இதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற  எண்ணத்தோடு  ஓபிஎஸ் செயல்படுகிறார். இதை எந்தவொரு அதிமுக தொண்டனும், நிச்சயமாக ஏற்கமாட்டான்.

இவ்வாறு அவர் கூறினார்.