சென்னை: உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சென்னை காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பயிற்சி முடித்த காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்களின் வீடுகளில் வேலைக்கு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்று விமர்சித்துள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில், பல காவலர்கள் ஆர்டலிகள் என்ற பெயரில் பணியமர்த்தப்பட்டு, அவர்களின் வீட்டு வேலைகள் உள்பட தனிப்பட்ட பணிகளுக்கான உபயோகப்படுத்தி வருகின்றனர். இதற்கு பல காவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஆர்டர்லி முறையில் தமிழகஅரசின் முடிவு மற்றும் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் கூட்டங்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், ஆர்டலிகளை பணியில் வைத்துள்ள அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம் எனக் கூறினார். ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அரசியவாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது அது அழிவுக்கு கொண்டு செல்லும் என அறிவுறுத்தியவர், அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் தவறுதான் என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியவர், காவல்துறையினரின் இதுபோன்ற நடவடிக்கைகள், குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும் என கூறியதுடன், காவல்துறை உயர் அதிகாரிகள், படித்தொகையை பெற்றுக்கொண்டு வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம் என்றார்.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்பு உதவியாளர்களை தமிழக அரசு நியமிக்கலாம், ஆனால் ரூ.45,000 சம்பளம் பெறும் பயிற்சி பெற்ற கான்ஸ்டபிள்களை ஆர்டர்லிகளாக நியமிக்க அனுமதிக்க முடியாது. இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்து உத்தரவுகளையும் திரும்பப் பெற வேண்டும். மீறுபவர்கள் மீத ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும், தேவைப்பட்டால் கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறினார். இந்த விவகாரத்தில், டிஜிபி மட்டத்தில் மட்டும் அல்லாமல், உள்துறை செயலர் மட்டத்திலும் நடவடிக்கை எடுத்ததற்காக அரசாங்கம் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிட்டார்.
ஆர்டலி என்பவர்கள் யார்?
தமிழக காவல்துறையில் ஆர்டலியாக 10,000 க்கும் அதிகமான காவலர்கள் உள்ளதாக தகவ்லகள் தெரிவிக்கின்றன.
காவலர்களாக பணிக்கு எடுக்கப்பட்டு உயர் அதிகாாிகளின் வீடுகளுக்கு எடுபிடி வேலைகள் செய்வதே ஆர்டலியின் பணியாகும். அதாவது, உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளான சமைத்தல், துணி துவைத்தால், மார்க்கெட் செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, அவர்களின் குடும்பாத்தாருக்கு ஓட்டுநா் பணி செய்வது என எடுபிடி வேலை செய்வதே ஆர்டலியாகும்.
மக்கள் நலப்பணிக்காக காவலர்களாக தோ்வு செய்யப்பட்டும், அவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் அதிகாாிகளின் வீடுகளுக்கு சேவை செய்கின்றனா். இதனால் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். உயர்அதிகாரிகளின் விரோத போக்கு காரணமாக பல காவல்ர்கள் ஆர்டர்லி பணிக்கு அனுப்பப்படுவதாக வும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால், ஆர்டர்லி பணியில் உள்ள பல காவலர்கள், வெறுப்புணா்ச்சியுடன் பணிபுாிவதால் மக்கள் மீது தங்களது கோபங்களை வெளிபடுத்தி வருகின்றனா்.
அதன் காரணமாக, ஆர்டலி முறை ஒழிக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் காவல்துறையில் பணியாற்ற சோம்பேறிப்படும் சில காவலர்கள், ஆர்டர்லி பணிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது. இந்த பணிக்கு செல்பவர்கள், காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், சீருடை அணிய தேவையில்லை, உடல் உழைப்பு தேவையில்லை, உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரிவதால், அவர்களின் ஆதரவோடு எந்த சலுகையானாலும் உடனடியாக கிடைக்கும் வாய்ப்பு, வெயிலிலும், மழையிலும் பணி பாா்க்க தேவையில்லை போன்றவை என சிலர் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், காவல்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவரை எப்படி வீட்டு வேலைக்கான பணிக்கு அனுப்பலாம் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.