டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,923 1 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய சுகாதார அமைச்சகம் ஜூன் 21-ஆம் தேதி காலை 8மணிக்கு வெளியிட்ட தகவல்களின்படி நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 779,313 ஆக உயர்ந்துள்ளது. தினசரி நோய்த்தொற்று சதவீதம் 2.55% ஆக உள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும், 9,923 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,19,396ஆக உயர்ந்தது.
நேற்று மேலும் 17 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,890 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக cள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் 7,293 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,27,15,193 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.61% ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 79,313 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.18% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 1,96,32,43,003 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,00,024 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.