சென்னை:
கொரோனா அதிகரித்து வருவதால் 50 முதல் 100 படுக்கைகள் வரை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மாவட்ட மருத்துவமனைகளில் 50 முதல் 100 படுக்கைகளை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்க வேண்டும் என்றும், தொற்று பகுதிகளில் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், லேசான அறிகுறி இருந்தால் பாரசிடமால், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கி தனிமைப்படுத்த வேண்டும் என்றும், வீட்டு தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதிக்குமாறு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.