டெல்லி: நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்களின் வன்முறை போராட்டம் அதிகரித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். மோடி தனது நண்பர்களின் குரலை மட்டுமே கேட்கிறார் என்று டிவிட் பதிவிட்டுள்ளார்.
மத்தியஅரசு, 4ஆண்டு ஒப்பந்த முறையில் புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்தினை அறிவித்து உள்ளது. இதற்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பீகார், உ.பி., தெலுங்கானா உள்பட பல மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறைக்களமாக மாறி உள்ளது.
இநத நிலையில், மத்தியஅரசின் நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்து, ராகுல்காந்தி டிவிட்பதிவிட்டுள்ளார். அதில்,
அக்னிபாத் – இளைஞர்கள் நிராகரித்தனர்.
விவசாய சட்டம் – விவசாயிகள் நிராகரித்தனர்.
பண மதிப் பிழப்பு – பொருளாதார நிபுணர்கள்நிராகர்த்தனர்.
ஜி.எஸ்.டி.- வர்த்தகர்கள் நிராகரித்தனர்.
நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்கு புரியவில்லை.
ஏனென்றால் அவர் தனது நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் கேட்பதில்லை.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.