சென்னை:
ளுநரின் உத்தரவுக்கு காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கைவிடுத்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று 31 வருடங்களுக்கு மேலாக நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர் என்பதும், இந்த வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையிலிருந்த பேரறிவாளன் கடந்த மாதம் 18ந்தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.