விசாகப்பட்டினம்:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .இந்தியா அணியில் சிறப்பாக பந்துவீசிய ஹர்சல் படேல் 4 விக்கெட்டும் சாஹல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இரு அணிகளும் மோதும் 4வது டி20 போட்டி வரும் 17ம் தேதி நடைபெறுகிறது .